Monday, October 3, 2011

இல்லை!


         மிகவும் பழக்கப்பட்ட வார்த்தையே! தினம் எத்தனை முறை நாம் இதை உபயோகிக்கிறோம்! எத்தனை இடங்களில்! முதல்ல வீட்டுல காலேஜுக்கு கிளம்பையில அம்மா சொல்லுவாங்க சாப்பிட்டு போன்னு அங்க ஆரம்பிக்கிறது "இல்லை" ங்கிற வார்த்தை.அப்பா கேட்பாரு "பரிட்ச்சைக்கு படிச்சியா? " ன்னு.அதுக்கும் ஒரு "இல்லை"ய போட்டுட்டு. காலேஜுக்கு வந்தா அங்கயும் வரும் " டே மச்சான்! படுச்சிடயா டா? " மனசாட்ச்சியே இல்லாம இந்த கேள்வி அந்த பரிட்ச்ச முடியற வரைக்கும் வருங்க. முடிஞ்சதுக்கு அப்புறமும் "நல்லா பண்ணுனியா?" ," பாஸ் பன்னிருவியா? " எல்லாத்துக்கும் ஒரு "இல்லை".
              ஆனால் நான் இந்த "இல்லை" ய பத்தி பேச வரல! பல இடங்கள்ள "இல்லை" ங்கிற வார்த்தையோட வலிமை மாறிப்போகுது! நாம சொல்லற "இல்லை" ய விட கேட்கிற "இல்லை" க்கு வலி அதிகம். மத்தவங்க நம்ம கிட்ட ஏதாவது உதவி கேட்கும் போது நாம "இல்லை" சொல்லும் போது இருக்கற வலிய("இல்லை" சொல்றதுக்கு எதுக்கு வலிக்குது!) விட நாம ஒருத்தர் கிட்ட உதவி கேட்கும் போது அவங்க சொல்ற "இல்லை" ய கேட்கிற வலி அதிகம்! அது அவங்கவங்க இருக்கிற சூழ்நிலயப் பொருத்தது!  அதுக்காக பரிட்ச்சையில  நண்பன் பிட்டு பேப்பர் காட்டலேன்னு "இல்லை" ன்னு  சொல்லிட்டான்னு வருத்தப்படறது ரொம்ப அதிகங்க! 
               நான் சொல்ற "இல்லை" பிஞ்சு குழந்தைகள் பசியில் பேருந்து நிலையங்களிலும், பொது இடங்களிலும் கை ஏந்தும் போதும் நான் சொல்லும் "இல்லை".தவறான வழியில் உடல் ஊனம், வேறு மாநிலம்,குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள், சுனாமியில் குடும்பத்தை இழந்தவர்கள் என எத்தனை பொய்க்காரணங்கள் (உண்மையாகவும் இருக்கலாம்) சொன்னாலும். மூன்று வேலை சாப்பாட்டிற்காக தான் அவர்கள் பொய் சொல்ல நேருகிறது என்பதை நம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது! அவர்கள் பொய் சொல்கிறார்கள் "இப்படி தான் எப்பப்பாரு வேற வேலையே இல்லை" ன்னு குறை கூறுகிறது நம் இதழ்கள்! பிஞ்சு விரல்களை பொய் சொல்லி பிச்சை கேட்கும் படி தூண்டிடும் அவர்களது உறவுகள்(உறவுகளா என்பதே சில நேரம் சந்தேகம்). 

        
     இந்த மாதிரி குழந்தைகளை காணும் பலருக்கு அவர்களை இந்த சூழ்நிலையில் இருந்து மீட்க்கதோனும். சிலருக்கு அருவருப்பான விஷயம், சிலருக்கு தேவையில்லாத வேலை,அவர்கள் யாசகர்கலாய் வளர்க்கப்படுகிரார்களே தவிர பிறக்கப்படுவதில்லை. பாதுகாப்பில்லாத பெண் குழந்தைகள்! இப்பொழுது ஆண் குழந்தைகளும் மிக அதிக அளவில்!             
       இந்தியாவில் மட்டும் பாதுகாபில்லாத குழந்தைகள் 11 மில்லியன். நம்ம டெல்லி ல மட்டும் 1,00 ,௦௦௦ பேரு. இதுல 54 சதவிகிதம் ஆண் குழந்தைகள், 45 சதவிகிதம் பெண் குழந்தைகள். பெண் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை பல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.ஆண்களுக்கும் தான் ஆண் குழந்தைகளில் எழில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது!


          அவர்களுக்கு எங்கும் பாதுகாப்பு  "இல்லை". நடப்பவை என்ன என்று அறியும் வயது அடையும் முன்னே வாழ்க்கையை இழந்து தவிக்கும் பல குழந்தைகள்! உறவினர்களாலே தவறான வழிகளுக்கு திருப்பப்படும் குழந்தைகளுக்கு வாழும் வாழ்க்கை "இல்லை". நாம் ஏலனப்பார்வையை வீசும் அந்த குழந்தைகளின் வாழ்க்கையில் எத்தனை சலனங்களோ!அங்கு "இல்லை " என்ற வார்த்தை உருவம் கொண்டு உயிராய்!

    
    வல்லரசை நோக்கி பயணிக்கும் நம் நாட்டின் பலர் அறியாத மறு பக்கம் அதில் சிக்கித் தவிக்கும் பிஞ்சு இதயங்கள்! துளிர்விட்டு வளரும் முன்னே கசக்கி எறியப்படுவது இங்கு பலர் அறியாத உண்மை! எப்படி செல்கிறது நம் நாடு வல்லரசை நோக்கி!

6 comments:

  1. இனி இந்தியா வில் குழந்தைகள் வன்-கொடுமைகள் "இல்லை " என்ற மாற்றத்திற்கு உறுதி கூறுவோம்..

    ReplyDelete
  2. படங்களுடன் பதிவைப் படிக்க சங்கடமாய் இருந்தது
    இதற்கெல்லாம் காரணம் பொறுப்பற்ற பெற்றோர்தான் ஆயினும்
    சமூக நோக்கம் கொண்டவர்கள் இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும்
    உடலின் மறைவுப் பகுதிதானே என நோய் தாக்க
    கண்டு கொள்ளாமல் இருப்பவன் புத்திசாலி இல்லை
    சமூக உணர்வைத் தூண்டிப் போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி! Sir!

      Delete