Monday, November 28, 2011

தெரிந்ததும் தெரியாததும்!

               நம் கடந்த காலங்களை மீட்க ஒரு ரீவைண்ட் பட்டனும், வேண்டாத நினைவுகளை அழிக்க டெலீட் பட்டனும், வேண்டிய ஒன்றை ஒரு சொடக்கில் கையருகே கொண்டு வர கூகுலும் நம் எதார்த்த வாழ்வில் இருந்தால் எப்படி இருக்கும் என நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நினைக்க வைக்கும் அளவுக்கு இயந்திர உலகத்தில் நாம் இருக்கிறோம்.


               முன்பெல்லாம் எப்பவும் புத்தகத்தில் மூழ்கி படிக்கும் குழந்தைகள் கொஞ்சம் பக்கத்து வீட்டில் இருக்கும் மத்த பசங்களோடு கிரிகெட் விழையாடுவது, நன்பர்கள் வீட்டிற்கு செல்வது, அரட்டை அடிப்பது என்பதெல்லாம் தான் அவர்களது பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்றோ பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிந்து கொள்ள விரும்புவதில்லை பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருக்கும் இல்லத்தரசிகள். இல்லத்தரசிகள் என்ற வார்த்தை கூட மறைந்து கொண்டே போகிறது. குழந்தைகளோ படிப்பதே கணினி முன் தான் (இன்டர்நெட்) இதில் பொழுது போக்கோ அதே கிரிகெட் தான் ஆனால் நன்பர்களோடு அல்ல கணினியோடு, நன்பர்கள் வீட்டிற்கும் செல்கிறார்கள் வீடியோ சாட்டில், அரட்டையும் அடிக்கிறார்கள் பேஸ் புக் மூலம் இப்படி எந்நேரமும் கணினியோடு முட்டி மோதும் குழந்தைகளுக்கு மற்றவர்களோடு பேசி பழகும் வாய்ப்புகள் மிகக்குறைவு. இதிலும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறவர்களாக இருந்து விட்டால் அவ்வளவு தான் அந்த குழந்தைகளின் உள் உணர்வுகளுக்கு எத்தகைய மதிப்பு கொடுக்கப்படும்.பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தையாக இருந்தால் முழுநேரமும் ஆயாவிடம். அம்மா இருக்கும் நேரம் அப்பா இருப்பதில்லை. அப்பா இருக்கும் நேரம் அம்மா இருப்பதில்லை. 
           
 முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்க வீட்டில் பெரியவர்களும் இருந்தார்கள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளோடு செலவழிக்க கொஞ்சம் நேரமும் இருந்தது. இன்றோ வீட்டில் பெரியவர்களும் இல்லை பெற்றோர்களுக்கு நேரமும் இல்லை. பல குழந்தைகள் தங்கள் பாட்டி தாத்தாவிடம் வீடியோ சாட் மூலமாக பேசுவதும் கூட வழக்கமாகி விட்டது. 
              பக்கத்து வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் நமது வீட்டிலிருந்து நடக்கும் நல விசாரிப்புகளும் உபசரிப்புகளும் கூட முற்றிலும் குறைந்து இன்று நம் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவே சில நாட்கள் தேவைப்படுகிறது. 
             "என் பையன் வெளி நாட்ல இருக்கான் கை நிறைய சம்பாரிக்கிறான் வாரா வாரம் எங்க கூட கம்பியூட்டர் ல பேசுவான்" என்று சொல்கிற பெற்றோர்களுக்குள்ளும் தன் மகனை பிரிந்திருக்கும் வேதனையும் ஏக்கமும் இருக்கும்.அப்படி வேலை செய்து அங்கேயே குடும்பதோடு வாழும் பலருக்கு தன் பெற்றோர்களோடு செலவழிக்க சில விநாடிகள் இல்லை. என் மகளுக்கு (அல்லது மகனுக்கு) குழந்தை பிறந்திருக்குன்னு அந்நியமா யாரோ ஒருதரா போனில் கேட்டுத் தெரிந்து கொள்வது சாதாரனமாகிவிட்டது. குழந்தையை கவனித்துக்கொள்வது எப்படி என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்த காலம் போய் இன்டர் நெட்டில் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். 


            எந்திரனின் சிட்டிக்கு என்னதான் மனித உணர்வுகள் ஊட்டப்பட்டாலும் அத்தகைய ரோபோக்கள் வெரும் இயந்திரமே அவற்றிர்க்கு அன்பின் அர்த்தம் தேவையில்லை ஆனால் அன்பு, அக்கரை, அரவணைப்பின் அருகாமை இன்றி நாம் வாழும் வாழ்க்கை மட்டுமல்ல நாமும் வெரும் பணம் சம்பாதிக்கும் ரோபோக்கள் தான்.

7 comments:

  1. நல்ல பதிவு.தொடருங்கள்

    ReplyDelete
  2. சொல் சரி பார்ப்பை தயவு செய்து நீக்கவும்

    ReplyDelete
  3. அனைவருக்கும் உள்ள ஆதங்கத்தை
    மிக அழகாக விரிவாக பதிவு செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்
    சொல் சரிபார்ப்பை நீக்கினால்
    பின்னூட்டமிட ஏதுவாய் இருக்கும்

    ReplyDelete
  4. எழுத்துக்களில் தீராத தாகம்!
    தலைமுறை இடைவெளி
    தந்துவிட்டு போனதா?

    கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  5. சொல் சரிப்பார்ப்பை நீக்கிவிட்டேன்!

    ReplyDelete
  6. குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன் என்றால் மனிதனின் பரிணாம வளர்ச்சி "எந்திர மனிதன்",மனிதன் ரோபோ களுக்கு மனித அறிவை ஊட்ட முயற்சி செய்து கொண்டு இருக்கிறான் ஆனால் அவன் ரோபோ வாக மாறி கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விட்டான் (மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமான குரங்குகள் இன்றும் உள்ளது மாதிரி "எந்திர மனிதர்கள்" மத்தியில் நிஜ மனிதர்கள் கொஞ்சம் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தருகிறது).தெளிவான சிந்தனைய சிந்திக்க தந்தமைக்கு நன்றி அக்கா

    ReplyDelete
  7. அருமை நறுகென்று சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete