Saturday, December 17, 2011

இன்னும் இருக்கிறார்கள்!

      இன்னும் இருக்கிறார்கள்! கலங்கும் விழிகளின் கண்ணீர் துடைத்திடும்  கரங்கள் கொண்டவர்கள், எதைஎதையோ தேடி தொலைந்து போகும் மனித உயிர்களின் மத்தியில் இதயத்தின் உணர்வுகளை கொஞ்சம் நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். "தனக்கான வாழ்க்கை, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று சுயநலமாய் வாழாமல் இந்த நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று நம் தலைவர்கள் எப்படி போராடினார்கள்" என்று நாமே நினைக்கும் அளவுக்கு சுயநலமாய் போகிறது நம்மை சுற்றி இருக்கும் உலகம். 
   

  பல இடங்களில் பல நேரங்களில் மனித உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை இருப்பினும் அதை எதிர்த்து நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். முதியோர்களுக்கு, பெண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு என தனித் தனி இருக்கைகள் பேருதுகளில் அறிமுகப்படுத்திய காலத்திலாவது அவை அரங்கேறியதா என்று எனக்குத் தெரியாது! ஆனால் இன்று எத்தகைய நீண்ட பயணமானாலும் முதியவர்களோ, இயலாதவர்களோ, கர்பினிப்பெண்களோ பேருந்தில் இடம் இல்லாமல் நின்றிருந்தால் இரக்கமே இன்றி பார்த்தும் பார்க்காமல் பார்வையை ஒதுக்கும் சுயநலமானவர்களுக்கு மத்தியில் தன் இருக்கையில் அமரச்சொல்லும் என் மனித இனத்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
      குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுச் செல்லும் பெற்றோர்களும், பெற்றோர்களை பார்த்துக்கொள்ள மனமின்றி முதியோர் இல்லத்தில் விட்டுச் செல்லும் உணர்வுகள் இருகிப்போன இல்லாதவர்களும் வாழும் சுயநல உள்ளங்களுக்கு மத்தியில் எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.
   "எங்கேயோ ஒரு பேருந்து விபத்துக்கு உள்ளாகிவிட்டதாம்" என நாம் கேட்டறிந்த ஒரு செய்தி நடந்தேறிய பொழுது சிக்கிக் கொண்ட உயிர்களை மீட்க அங்கு என்னவர்கள் சிலர் இருந்திருப்பார்கள். சம்பந்தமே இல்லாத போதும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க இன்னும் சிலர் இருக்கிறார்கள்.ஒருமுறை விபத்துக்குள்ளாகிய பள்ளிப்பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை காப்பாற்றப் போராடி தன்னுயிர் நீத்த ஆசிரியரும் இருந்திருக்கிறார் இங்கு நம்மோடு.
        அப்படி நடக்கும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை முதலுதவி கொடுத்து காப்பாற்ற நினைக்கும் மருத்துவர்களும் விபத்துக்கான காரணம் என்ன என்று அலசி அதை தடுத்து நிறுத்தப் போராடும் என் சில வழக்கறிஞர்களும் இன்னும் இங்கு இருக்கிறார்கள். நம் பகுதியில் நாம் காணும் சில ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்களை கண்டும் காணாமல் போகும் நல்லவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்ட சில தன்னார்வ நிறுவனங்களும் உதவிக்கரங்கள் நீட்டுகிறார்கள்.

   
         உருவமற்று கிடக்கும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து நேசிக்க சிலர் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள். தொட்டு வந்த கருவறைக்கும் தேடிப்போகும் கல்லரைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இந்த ஒற்றை வாழ்க்கையில் 'நான் நான்" என்று சுயநலத்தை கட்டிக்கொண்டு இனவேற்றுமை, மொழிவேற்றுமையை கடந்து நிற வேற்றுமையை சிதறிவிட்டு மனிதக்குருதியில் ருசிகண்டு இன்று எதைத் தேடி நாம் இங்கு நம்மவர்களை நேசிக்க மறந்து போகிறோம்.
      பத்துயிர் எடுக்க ஒருவன் துனிந்திருந்தால் அதில் ஒற்றை உயிரையாவது காப்பாற்ற என்னவர்களில் ஒருவராவது உதவிக்கரம் நீட்டும் வரை உயிர்வாழும் இந்த பூமியில் ஒரு சிரு இறகாய் நான்!

8 comments:

 1. Human Being=selfish brainless animal

  ReplyDelete
 2. நல்லவைகளை காணும் கண்களும்
  நல்லனவற்றை மட்டுமே எண்ணும் மனமும்
  நல்லனவற்றையே செய்யும் கைகளும் கொண்ட மனிதர்கள்
  இன்னமும் இப்பூமியில் நிறைந்துள்ளதால்தான்
  இப்பூமி இன்னமும் சுழன்றுகொண்டுமிருக்கிறது
  நீடித்து நிலைத்தும் இருக்கிறது
  நல்ல சிந்தனைகளை விதைத்துப் போகும்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. என்னை மேலும் சிறந்த பதிவுகளை எழுத ஊக்குவிக்கும் தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. நிச்சயமாக இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்ல POSITIVE எண்ணம் கொண்ட பதிவு. உங்கள் PROFILE ல் Hearbeat பிடித்தமான இசை என்று போட்டிருந்தீர்கள். இது எதிர்பார்க்காத ஒரு பிடித்தம். உங்கள் எழுத்துக்கள் நிச்சயமாக ஒரு அற்புதம்.

  ReplyDelete
 5. @விச்சு
  தங்களது வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 6. மிகவும் அருமையாக,
  ஒவ்வொன்றையும் வெகு அழகாக
  நன்கு மனதில் தங்கும் விதமாக,
  அனைவரும் ஒரு நிமிடமாவது சிந்தித்துப்பார்க்கும் விதமாக
  எழுதியுள்ளீர்கள்.

  என்னுடைய சிறுகதைகள் பலவற்றிலும் நான் மனித நேயத்தை கொண்டுவந்துள்ளேன். அவற்றில் ஒரு சிலவற்றின் இணைப்புகளை இங்கு தருகின்றேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, மெதுவாக ஒவ்வொன்றாகப்படித்துப்பார்த்து கருத்தளியுங்கள்.

  அன்புடன்,
  VGK

  ReplyDelete
 7. மனித நேயம் மனிதாபிமானம் பற்றிச்சொல்லும் ஒருசில சிறுகதைகள்:

  1] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html
  ஜாங்கிரி

  2] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1908.html பூபாலன்

  3] http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_6.html
  உண்மை சற்றே வெண்மை பகுதி 1 / 2

  4] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_9351.html நகரப்பேருந்தில் ஓர் கிழவி

  5] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_9317.html நன்றே செய் அதுவும் இன்றே செய்

  6] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_09.html
  ஏமாற்றாதே ஏமாறாதே

  7] http://gopu1949.blogspot.in/2011/06/1-of-3.html
  யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!

  8] http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2_13.html
  நாவினால் சுட்ட வடு பகுதி 1 / 2

  9] http://gopu1949.blogspot.in/2011_09_01_archive.html
  ஜா தி ப் பூ

  10] http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html
  சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

  11] http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html
  ”இனி துயரம் இல்லை”

  12] http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html
  ”தாயுமானவள்” பகுதி 1 / 3

  அன்புடன்
  VGK

  ReplyDelete