Wednesday, December 28, 2011

அவளும் நானும்!


   ரசித்து நேசிப்பதற்கு இங்கு எத்தனையோ! வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை?. என்னைப்பற்றிய பல விளக்கங்கள் அறிந்தேன் நானும் அவளிடம். கண்ணீரை கரைத்து மறைத்திடும் மழைச்சாரலுக்கு உரிமை கொண்டாடி கரைசலாய் கரைந்து போன கடந்த காலங்கள். ரத்தமும் சதையுமாய் என்றும் ஒட்டிக்கொண்டு என்னோடு மல்லுக்கட்டும் அவளது நினைவுகள் என் தனிமையில். அவள் அருகாமையிலோ வேண்டுமென்றே வேண்டாததை செய்து அவளிடம் திட்டுவாங்கவே காத்திருப்பேன்.

      
           நான் ரசித்ததை சொல்லித் தீர்த்துவிட என்னிடம் வார்த்தைகள் பற்றாக்குறை ஆகிறது. இங்கு போட்டிகளும் உண்டு பொறாமைகளும் உண்டு, நான் வேலை செய்யாதவரை அவள் போட்டி போடாதவள், நான் என் உரிமையை யாரிடமும் கொடுக்காதவரை அவள் பொறாமை இல்லாதவள்.என்னோடு ஆலோசனை செய்கிறாள் சிறு துரும்பை அசைப்பதற்க்கு கூட, நான் வேண்டாம் என்பதை வேண்டும் என்கிறாள்(எனது உணவுகளில்), நான் வேண்டும் என்பதை வேண்டாம் என்கிறாள்(செல்ல திட்டல்கள்). 
           தினமும் பரிமாறிக்கொள்ள நான் வார்த்தைகள் தேடியதில்லை, ஒவ்வொரு அசைவிலும் ஆசையாய் ஆயிரம் மொழிகள் எனக்காக மட்டும் சமர்ப்பிக்கிறாள்!அவள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள என் புன்னகையை காரணமாக்குகிறாள். அவள் நேசத்திற்கு என் முத்தங்களை சாட்ச்சியாக்குகிறாள். சளைக்காமல் தோழ்கள் உயர்த்துகிறாள் நான் தலை சாய்த்துட.

       
          சித்திரச் சிதறல்களாய் அவள் கைரேகைக்குள் கிறுக்கல்களாய் தொலைந்து போக ஆசை. அவள் கைபிடித்து நடைபழகிய காலம் இன்னும் கடந்து போகவில்லை என்பதை ஞ்யாபகபடுத்துகிறேன் இன்றும் அவள் கைபிடித்து கல்லூரி வாசலை கடக்கையில். 
                     இப்படி சிந்தாமல் சிதறாமல் சேகரித்த நினைவுகளை சித்திரத் தேரில் பூட்டி உலா வர ஆசை தான்! இதற்கு மேல் விவரிக்க வார்த்தைகளின்றி அனைத்து அர்த்தங்களையும் மூன்றே எழுத்துக்களில் அடைத்து முடித்துக்கொள்கிறேன். அவள் "அம்மா!".


16 comments:

 1. பதிவே ஒரு அழகிய கவிதையாய்...
  திரும்பத் திரும்ப் படிக்கத் தூண்டும் அருமையான சொற்சித்திரம்
  மூன்று எழுத்துக்களில் சொல்ல வேண்டுமெனில் " அருமை"
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வார்த்தை வார்த்தையாய் அனுபவித்து ரசித்தேன்..
  ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு சித்திரமாய்..
  உன் படைப்புகளிலேயே மிகச்சிறந்தது..
  பானு மா.. U r soooooo Lucky..!!

  ReplyDelete
 3. @Ramani
  தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
  சிறந்த பதிவினை இட்ட சந்தோஷத்தில் கருத்துரைகளுக்கு எத்தகைய பங்கு உண்டு என்பதை உணர்கிறேன் இன்று!

  கருத்துரைகளுக்கு மிக்க நன்றி!
  எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. எப்படிங்க!!! கட்டுரைகூட கவிதையாய்!!

  ReplyDelete
 5. @விச்சு
  கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 6. இதற்கு மேல் விவரிக்க வார்த்தைகளின்றி அனைத்து அர்த்தங்களையும் மூன்றே எழுத்துக்களில் அடைத்து முடித்துக்கொள்கிறேன். அவள் "அம்மா!".//நன்றி

  ReplyDelete
 7. @மாலதி
  கருத்துரைக்கு நன்றி

  ReplyDelete
 8. அருமையான பதிவு ,, ரசனையான வரிகள்

  ReplyDelete
 9. @Surya Prakash
  கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 10. ஞாபகங்களை கிளறிப்பார்க்க வைக்கிற வார்த்தைகள்.
  அம்மா என்கிற உருவம்..இருக்கிறபொழுதுகளை காட்டிலும்
  இல்லாத பொழுதுகளில் தான் அதிகமாய் தெரிகிறது.தேவைப்படுகிறது. வாழ்த்துக்கள்.

  தீபிகா.

  ReplyDelete
 11. @தீபிகா(Theepika)
  தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

  ReplyDelete
 12. மிகககககககககககககககககக அற்புதம்.ஏதோ ஒரு அறிமுகம் தெரிகிறது இவ் எழுத்துகளில்.சந்திப்போம் சொந்தமே.

  ReplyDelete
 13. ’அ ம் மா’ வைப்பற்றி அழகான கவிதை அ ம் மா!

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)))))

  [19.11.2012 வலைச்சரத்தின் மூலம் வருகை தந்துள்ளேன்]

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
 14. மற்றையவர்கள் கருத்துப் போல கவிதையாகவே உள்ளது ஆக்கம்
  இனிய நல்வாழ்த்து யுவராணி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. யுவராணி பெயரைப்போலவே அம்மா கவிதையாக இனிக்கிரது. வாழ்த்துக்கள் சொல்லுகிறேன்.

  ReplyDelete