Monday, January 23, 2012

விந்தையான பூமியின் சாலையோரப்பூக்கள்


விண்ணிலேயே சுற்றித்திரியும் வின்களத்திர்க்கு அந்நியமாய் போனதோ இந்த பூமி,இவ்வுலகிலேயே வசித்திருந்தும் அந்நியமாய் போன உறவுகள் என்னவென்று சொல்வது? 


பாவப்பட்ட பாதங்களில் மிதிபடும் கல் இங்கு தன்னை சிலையாய் கற்பனை செய்து பார்த்து சிலாகிக்கிறதோ. சாகத்திரிந்த உயிருக்கு இங்கே சாகசம் கற்றுக்கொடுத்து வித்தகனாக்குகிறார்கள் சிலபேர்.

விந்தையான இந்த பூமியில் விடியல் கூட காலங்களின் விரயமாய். காரணமின்றி சாகும் நொடிகள் ...விளக்கமின்றி தன் போக்கில் வந்து போகும் இரவுகள் என அனைத்தும் வினோதமாய்.

உள்ளங்கை ரேகையின் கிறுக்கல்களுக்கு மத்தியில் எங்கோ புதைந்து போன வாழ்க்கையை மீட்க நீளும் கரங்கள் அகதியை போல் அன்பைத் தேடி தனிமையில் தொலைந்து போகும் இதயங்களை மீட்க வருவதில்லையே.

திரைப்படக்காதலில் தொலைந்து போகும் சில இருபதுக்கள் பாதை மாறி பற்றுப்போகிறதோ  பலநேரம்...உயிரை பங்கிட்டு முகவரி கொடுத்தவர்கள் இங்கு முதியோர் இல்லத்தில் தாய்ப்பாலை யாசகம் வாங்கியவர்கள் இங்கு அந்நிய நாட்டில் பணத்திற்காக.

சிறகடிக்க வேண்டிய கனவுகளை சிறகொடித்து இதயக்கூட்டில் புதைத்து விட்டு இன்றும் பள்ளிவாசலை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வேலைக்குப்போகும் பிஞ்சு இதயங்கள் இங்கு எத்தனையோ.கோடி கோடியை பணம் கொட்டிக்கிடக்கையிலும் ஆடம்பர செலவுக்கு நீளும் கரங்கள் ஏழைக்குழந்தையின் கல்விக்கு நீள மறுப்பதேனோ.

கல்விக்கு உதவி கேட்பவர்கள் அனாதை இல்லங்கள் மட்டும் அல்ல மனித இனத்திற்கும் மக்கிப்போகும் மண்ணிற்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியை கருவிழியில் கனவுகளோடும் இதயக்கூட்டில் லட்சியங்கலோடும் வரண்டுவிட்ட சுவாசக்குழாயின் தாகத்தோடும் இறுகிப்போன உணவுக்குழாயின் பசியோடும் முட்புதருக்குள் இருந்து முட்டி மோதி வேரூன்ற போராடும் சாலையோரப்பூக்களுமே.

கண்ணாடி இதயங்கள் பல நித்தம் இங்கு விதியோடு மோதி  நொருங்கிப்போகின்றன...சட்டையில் கொஞ்சம் சல்லடை கண்களா அல்லது சல்லடை கண்களால் தைக்கப்பட்ட சட்டையா என்று இன்றும் புரியாமல் தவிக்கிறேன்.

இப்படி அனைத்தையும் எண்ணி என் இதயம் ஆர்ப்பரித்து கொண்டிருக்க சில நொடி மௌனம் வேண்டி நிற்கிறேன் காலத்திடம்.    
  

14 comments:

 1. எழுத்து நடையில் மதி மயங்கி
  இரண்டு மூன்று மூன்று முறைப் படித்தேன்
  அருமையான சொல்லாட்சி
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எங்க போனீங்க? சீக்கிரமா அடுத்த பதிவு எழுத வாங்க.

  ReplyDelete
 3. @Ramani
  தங்களது ஊக்குவிக்கும் கருத்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 4. @விச்சு
  தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி! அடுத்த இடுகைக்கு தயாராகிறேன்!!!!

  ReplyDelete
 5. நான் தங்கள் பதிவுகளின் தீவீர ரசிகன்
  என்வே எனக்கு கிடைத்த விருதினை
  தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
  என்னுடைய பதிவினிற்கு விஜயம் செய்ய வேணுமாய்
  அனபுடன் வேண்டுகிறேன்

  ReplyDelete
 6. //கோடி கோடியை பணம் கொட்டிக்கிடக்கையிலும் ஆடம்பர செலவுக்கு நீளும் கரங்கள் ஏழைக்குழந்தையின் கல்விக்கு நீள மறுப்பதேனோ.
  நடைமுறை எதார்த்தம்.. மிகவும் ரசித்தேன்.. ரமணி அய்யா விடம் கிடைத்த விருத்துக்கு பாராட்டுக்கள்.. உன் பதிவுலகிற்கு ஒரு மைல்க்கல்.. :)

  ReplyDelete
 7. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. @ Rathnavel Natarajan
  தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 9. @Ramani
  மிக்க மிக்க நன்றி சார்! தங்கள் விருதினை நான் என்னை மேலும் நல்ல பதிவுகளை தந்திட ஊக்குவிக்கும் பரிசாகவே ஏற்றுக்கொள்கிறேன்!!!

  ReplyDelete
 10. yuvaa neenga ennoda friend thane.neenga yuvaa tamil eh...she is my friend...sorry neenga avanga illainaa...

  ReplyDelete
 11. நானே அக்கா நானே தான்! யுவா தமிழ்!

  ReplyDelete
 12. உணர்வுகளை உருக்கமாக பதிவு செய்வது என்பது அற்புதமான கலை.தங்களின் எழுத்துக்கள் உணர்வுகளை உருக்கமாக பதிய செய்து படிப்பவர்களை உருக செய்கிறது.அருமையான எழுத்து நடை ...தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 13. அருமையான தலைப்பு.

  மனதை கனக்க வைக்கும் கட்டுரை.

  //கோடி கோடியை பணம் கொட்டிக்கிடக்கையிலும் ஆடம்பர செலவுக்கு நீளும் கரங்கள் ஏழைக்குழந்தையின் கல்விக்கு நீள மறுப்பதேனோ.//

  ????????? ஏன ஏன ஏன ஏன ???????????

  பதிவுக்கும் பகிர்வுக்க்ம் நன்றிகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. இதுவும் கவிதை நடையாகவே உள்ளது. சிறப்பு.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete