Sunday, February 12, 2012

எனது பாதையின் முதல் மைல்கல்!

இந்த பதிவுலகில் கடக்க வேண்டிய தொலைவறிந்தும் எனது முதல் மைல்கல்லை அடைந்துவிட்ட சந்தோஷத்தோடும் மேலும் நல்ல பதிவுகளை தரவேண்டும் என்கிற குறிக்கோளோடும் இந்த பதிவினை பகிர்கிறேன். பதிவுலகில் எனது வலைப்பூவை பதியமிட்ட சில மாதங்களில் "Versatile Blogger Award" கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. முத்தாய் மாற வித்தாகும் சிற்பிக்குள் மழைத்துளியாய் இந்த பரிசினை நான் திரு ரமணி ஐயாவிடம் இருந்து ஏற்கிறேன்.மேலும் எனது அனைத்து பதிவுகளையும் வாசித்து தகுந்த பின்னூட்டங்களை இட்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கும், அவரது விருதுக்கும் (ஊக்கப் பரிசுக்கும்) நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்


பிடித்ததும் ரசிப்பதும்
  • அம்மாவுடனான நேரங்கள்
  • மழை
  • வலைப்பூ இடுகைகள்
  • லிட்டில்  சிஸ்டர்ஸ் ஹோமும்(முதியோர் இல்லம்) அங்கிருக்கும் எனது தோழரும்
  • சைக்கில் பயணம்
  • குழந்தைகளின் மழலைப்பேச்சு
  • தனிமையில் இதயத்துடிப்பின் ஓசையை ரசிப்பது 
விருதினை பகிர விரும்பும் ஐந்து பதிவர்கள் 
  • மனதின் உணர்வுகளை வெளிப்படையாய் அழகிய நடையில் பதிக்கும்  கலை  அவர்களுடனும் 
  • வரிகளில் எதார்த்தத்தையும் பல அறிவியல் துணுக்குகளையும் பகிரும்  விச்சு   அவர்களுடனும் 
  • வாழ்வின் எதார்த்தங்களை எளிய நடையில் பதிக்கும்  வே.சுப்பிரமணியம்  அவர்களுடனும் 
  • சொல்ல வந்த கருத்தினை மிக தெளிவாக சொல்லும்  கடம்பவனக் குயில்  அவர்களுடனும் 
  • சமூக சிந்தனையுடன் பல கருத்துக்களை முன்வைக்கும்  சீனி  அவர்களுடனும் 
நான் இந்த விருதினை பகிர விரும்புகிறேன். தாங்களும் இந்த விருதினை உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

21 comments:

  1. விருதினை ஏற்றுக் கொண்டமைக்கும்
    பொருத்தமான பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
    பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தாங்கள் என் எழுத்தினை தேர்ந்தெடுத்து எடுத்தமைக்கு நன்றி யுவராணி. விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. @விச்சு
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் தங்களின் அறிமுகம். நேரம் கிடைத்தால் பாருங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_13.html

    ReplyDelete
  5. உங்களுக்குப் பிடித்தவை உங்களைக் காட்டுகிறது தோழி.விருது வாங்கிய உங்களுக்கும் உங்களிடம் வாங்குபவர்களுக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  6. Sakothari yuwaraani thamizharasan!

    ungalukku enathu manamaarntha
    nantriyinai theriviththu kolkiren!

    melum ungalathu pani
    sirakka vaazhthukiren!

    ungalathu viruthinai etrukolkiren!

    ReplyDelete
  7. எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலையே ....எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ...நீங்க விருது வாங்கியதுக்கு பெரிய பெரிய நிறைய நிறைய வாழ்த்துக்கள் ...ரொம்ப நன்றி நீங்க எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு ......

    ReplyDelete
  8. @ஹேமா @கலை @விச்சு @Seeni
    ஒரு கலையை அறிவதிலும், ஊக்கப்படுத்தி உற்ச்சாகமூட்டி வரவேற்பதிலும் கருத்துரைகளின் பங்கு மிக அதிகம்!!!
    தங்களது வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  9. @விச்சு
    வலைச்சரம் பகுதியை பார்த்தேன் தங்களது அறிமுகத்தையும் ரசித்தேன்!
    எனது வலைப்பூவின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி!!!
    எனது பதிவுகளுக்கு தாங்கள் இடும் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  10. yuwraani thamizharasan avarkale!
    ungalathu viruthinai etrukonden!
    saka pathivaalarkaluku pakinthu konden!

    ungalathu viruthu ennai melum
    ezhuthida vaikkum!
    nantrkal pala ungalukku!
    paarkka;seeni-kavithaigal .blogspot.com
    thalaippu;ella pukazhum iraivanukke!

    ReplyDelete
  11. @Seeni
    தங்களது வலைபதிவை பார்த்தேன்! தங்களுக்கும் தங்களிடம் விருதினை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. @தமிழ்த்தோட்டம்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  13. yuvaa neenga ennai motivate panna koduththau naanum nanarintha sirantha pathivargalukku koduthu irukkiren...

    nanri enakku neenga koduththarkku....

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் விருதினை ஏற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

      Delete
  14. சகோதரி என் இணையதள இணைப்பின் குறைபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக இணையத்தினை பயன்படுத்தமுடியாததால் தங்கள் விருதினை ஏற்க இவ்வளவு தாமதாகிவிட்டது. மன்னிக்கவும். தங்கள் பகிர்ந்த இந்த விருதினை தலைவணங்கி ஏற்றுக்கொள்கறேன். நன்றி. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் விருதினை ஏற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

      Delete
  15. வாழ்த்துகள். மேலும் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும், எழுத்துலகில் ஜொலிக்கவும் என் அன்பான ஆசிகள்.

    ReplyDelete