Tuesday, February 14, 2012

என் கல்லூரி சாலை!
      மேகம் சிலிர்த்துவிட்டு போன பனி சாரலை சேகரித்து நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை தோன்றுமே, அதில் நனையாமல் நனைந்து என் அவனோடான(சைக்கில்) பயணம் என்னுள் பதியாமல் பதிந்ததை பதிவுலகில் பதித்துவிட்டு போக வந்திருக்கிறேன்! 
   
   விலகாமல் விலகி நான் கண்விழிக்கும் மலைக்கோவிலை அணைத்துநிற்கும் மார்கழி மாதத்து பனிக்கு மத்தியில் கூப்பாடு போட்டு சிலிர்த்து நிற்கும் மயிலும், காலை நேரத்து தென்றலுக்கு வளையாமல்   வளையும் தென்னை மரங்களும் வணக்கம் சொல்லிவிட்டு போகுமே   கொஞ்சம் எனக்கும் சொல்வதாய்!  

           
  சில்வண்டுகளும் சில்லிட்டுபோகும் சில்லென்ற பனிக்காற்றில் பனிபோர்த்திய பாதையில் என் தனிமையோடு மல்லுக்கட்டி கீச்சிட்டுக்கொண்டே வரும் என் சைக்கிலும், எத்தனை பதட்டத்தில் வந்தாலும் என்னை திரும்பிப்பார்க்க வைத்துவிடும் தெரு முற்றத்து அம்மன் கோவிலும், என் மௌனம் களைத்துவிட்டு போகும், ஐந்துக்களின் கூக்குரலும் மனதோடு ஒட்டிக்கொண்டு துள்ளல் போடுமே நாள் முழுக்க! 

        
     மண்ணோடு ஒன்றி வளர்ந்துவிட போராடும் நட்டுவைத்த வாழைக்கன்றுகளுக்கு மத்தியில் புறாக்களின் சரசம் எனக்கு மட்டும் துள்ளியமாய் கேட்குமே! வழி நெடுக துணை வரும் என்னோடு, பூத்துனிற்கும் சாமங்கிப்பூவின் வாசமும் அம்மாவின் அறிவுரை சுவாசமும்! 

           
            " 'ச்ச' இவ்வளவு தூரம் தனியாக வந்துவிட்டேனா? " என நான் பிரம்மித்த என் கடந்த கால நினைவுகளை நினைவூட்டிப்போகும் மைல்கற்கள்! பனி முத்தங்களை ஏந்தி நானத்தில் வளையாமல் வளைந்து மருகும் புல்தரையின் அழகில் வார்த்தைகளை தொலைத்துவிட்டு தவிக்கிறேன் பல சமயம்! துரித வேகத்தில் 10 நிமிடங்களில் கடந்துவிட வேண்டிய என் பாதையை கடக்க எனக்கு மட்டும் 20 நிமிடங்கள் ஆகிறது! 


              கல்லூரிக்கு நேரமாகிய காலை பயனமே இப்படி கழிகையில் எனது மாலை நேரத்து பயனம் சொல்லவா வேண்டும்!!! மாலையும் அல்லாது இரவும் அல்லாத ஆறைத்தாண்டி மணி முல்லும் நொடி முல்லும் ஒட்டிக்கொள்ளும் இருள் கவ்வும் நேரத்தில் வண்டுகளின் கீச்சிடல்களும், மின்மினிப்பூச்சியின் ஒளியும் துணை வருமே வீடு திரும்புகையில்!! சோர்ந்து போகும் மாலை கூட சிலிர்த்துக்கொண்டு துள்ளி குதிக்கும் குஞ்சுகளோடு கூட்டம் கூட்டமாய் கூடு திரும்பும் பறவைகளை கண்டு!


இப்படியான என் நினைவுகளுக்கு உரிமை கொண்டாடி அடுத்த மார்கழிக்கு காத்திருக்கின்றன என் பாதைகள்!


29 comments:

 1. anaithum arumai ..vaazthukkal

  ReplyDelete
 2. Nice.. please read my tamil kavithaigal blog in www.rishvan.com

  ReplyDelete
 3. Loved it a lot..!! Wants to b ur everloving fan forever!!

  ReplyDelete
 4. நானும் பயணிப்பதை உணர்ந்தேன்
  படங்களுடன் பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி Sir!

   Delete
 5. padangal vaarthaikku valu serkkirathu!
  ethuvume sollaamal varikali azhakai viaththu
  azhaiththu vanthu vitteerkal!
  kadaisi varai!

  varnanai arumaiyaana-
  varikal!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும மிக்க நன்றி!

   Delete
 6. மாலையும் அல்லாத இரவும் அல்லாத வர்ணனை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்துரைக்கு நன்றி!

   Delete
 7. ரசனையான நினைவுகளில் உருளும் மிதிவண்டிச் சக்கரத்தின் சுழற்சியில் கல்லூரிச் சாலை மனக்கண்முன் வந்துபோகிறது. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும மிக்க நன்றி!
   தங்களது கருத்துரை கூட கவிதை பேசுகிறது!

   Delete
 8. அழகான வர்ணிப்பு அதற்கேற்ற படங்களுடன்... அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும மிக்க நன்றி!

   Delete
 9. சில்வண்டுகளம் சில்லிட்டு்ப் போகும் சில்லென்ற பனிக்காற்றில்... -இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அருமைங்க. சைக்கிள் ஓட்டியபடி ஊரைச் சுற்றிய நினைவுகளுக்குள்ள ‌போக வெச்சுட்டீங்க. ரியலாவே நானு்ம் உங்ககூட பயணிச்ச ஃபீல் கிடைச்சது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களோட வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க!!!

   Delete
 10. நாம் பயனித்துப்போன எந்த பாதையையும் நாம் மறந்து விடலாம் ஆனால் கல்லூரிசசாலைகளை மட்டும் மறக்கவே முடியாது. வாழ்வின் கடைசி நொடி வரை மறக்க முடியாதவை அவை.

  இனிமையானவை அவை..

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் நினைக்க நினைக்க தீராத
   நினைவுகளை என்றுமே தத்துக்கொடுக்கும்
   நம் கல்லூரி சாலைகள்
   வருடங்கள் எத்தனை கடந்தாலும்!!!
   தங்களது வருகைக்கும கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   Delete
 11. புகைச்
  சித்திரங்களுக்கு
  உயிரூட்டுகிறது
  தீட்டிய வரியோவியம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   Delete
 12. உள்ளத்து ஆசைகளை ஊற்றி ஒரு பதிவு ..
  படித்தேன் மகிழ்ந்தேன் .. பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   Delete
 13. //ச்ச' இவ்வளவு தூரம் தனியாக வந்துவிட்டேனா? " என நான் பிரம்மித்த என் கடந்த கால நினைவுகளை நினைவூட்டிப்போகும் மைல்கற்கள்//

  படித்தேன்...ரசித்தேன்...
  நினைவோடையில் நீந்தி வர்த்தைகளை தேடி வரைந்துள்ளீர்கள்.அருமையான பதிவு

  ReplyDelete
 14. யுவராணி அடுத்த பதிவினை விரைவில் எழுதுங்கள். ஆவலோடு விச்சு.

  ReplyDelete
 15. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 16. பசுமை நிறைந்த நினைவுகளாக அழகிய பதிவு.

  உங்கள் இனிய பதிவுகள் எழுத்துப் பிழைகளால் கறை படாமலிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
 17. //சோர்ந்து போகும் மாலை கூட சிலிர்த்துக்கொண்டு துள்ளி குதிக்கும் குஞ்சுகளோடு கூட்டம் கூட்டமாய் கூடு திரும்பும் பறவைகளை கண்டு!// ;)))))

  தங்களுடன் சேர்ந்து பயணித்த உணர்வு கொடுத்த நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete