Wednesday, May 2, 2012

சிதறிய கனவுகள்!






சிந்திய கனாத்துளிகளில்
சிதறிய வார்த்தைகளை கோர்த்து
ஒரு கவிதை வடித்து,
நெஞ்சின் ஓரம் துளிர்த்த
ஏக்கம் திருடி
அதற்கு உணர்வுகள் கொடுத்து,
தீண்டிய மழைத்துளிகளை செதுக்கி
உருவமும் கொடுத்து,
விழியோரம் கசிந்த
கண்ணீர்த்துளிகளை திரட்டி
வண்ணம் தீட்டி,
மழழையின் குறும்புகள் கடத்தி
மனிதமும் கொடுத்து,
எனது அர்த்தமற்ற கிறுக்கல்களின்
அர்த்தம் தேடி பெயரும் சூட்டிவிட்டேன்!
ஏனோ மௌனம் சாதிக்கிறது
உயிர்கொடுத்து ஸ்பரிசிக்க
சில்லிட்ட என் சிந்தனைகளை திருடி
காலம்!

22 comments:

  1. மௌனத்தின் அர்த்தம்
    கவிதை தன்னை வென்றுவிடக் கூடுமோ
    என்கிற அச்சமாகக் கூட இருக்கலாமோ ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஊக்கத்தினை(நம்பிக்கையை) வார்த்தைகளாக கொண்ட தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி சார்!

      Delete
  2. ஹாய் யுவா ,


    நலமா ....


    கவிதை சுப்பரா இருக்கு டா ....

    ReplyDelete
    Replies
    1. அக்கா நல்லா இருக்கேன்!
      இனிமேல் பதிவுகள் தொடர்ந்து போட்டுடறேன்!
      Thnx Akka!

      Delete
  3. nalla varikal!
    puthu puthu vaarthaikal!

    nantru!

    thodarnthu ezhuthungal!

    vaazhthukkal!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. "தீண்டாய் மெய் தீண்டாய்!" ஆமாம் உணர்வுகளை வார்த்தைகளுக்குள் ஒளித்துவைத்து, அதை கவிதையாக வெளிப்படுத்துவது அற்புதம். அருமை தங்களது கவிதை. தொடர்ந்து சிறப்பு செய்ய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      Delete
  5. என்னாச்சுங்க.. ரொம்ப நாளா காணோம். ஒரு அழகான கவிதையோட வந்திருக்கீங்க. தொடர்ந்து வாங்க யுவராணி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையின் அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராகையில் பதிவு உலகோடான இடைவெளி மிகுந்துவிட்டதை நானும் உணர்கிறேன்!
      இனி தவறாமல் பதிவிடுகிறேன்!
      கருத்துரைக்கு நன்றி!

      Delete
  6. மிகவும் ரசித்தேன்... Hats off!!

    ReplyDelete
  7. சில்லிட்ட என் சிந்தனைகளை திருடிய காலம்!
    -எக்ஸலண்ட் யுவராணி! கவிதை மனதைத் திருடியது. சொல்லாடல் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி Sir!

      Delete
  8. கணேஷ் சார் மூலம் இன்றைய வலைசரதிளிருந்து தங்கள் அறிமுகம் கிடைத்தது, நான் முதலில் வாசித்த கவிதையே அருமையாய் உள்ளது, இனி தவறாது என் வருகையும் இருக்கும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றிகள்!

      Delete
  9. வார்த்தைகளின் தோழமை கவிதையாய் கசிகிறது!
    http://ensanthosh.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றிகள்!

      Delete
  10. அழகான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. Hey! This is my first visit to your blog! We are a group of
    volunteers and starting a new initiative in a community in the same niche.
    Your blog provided us valuable information to work on. You have done
    a marvellous job!

    My page - how to get your girlfriend back (wikipedia.org)

    ReplyDelete