Monday, May 14, 2012

கத்தியின்றி ரத்தமின்றி!
ஏதோ ஒரு மூலையில்
எங்கோ நடப்பதாய் ஆனால்
அனைத்தும் நம்மை சுற்றியே!

பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்
துளிர்த்துவிட்டபோதிலும்
இன்னும் இருக்கிறார்கள்
திருமணச்சந்தையில்
திக்கற்று நிற்கும் சுடர்விழிகள்!

"அவங்க பொழங்காத ஜாதி"
என்று சிலர் சொல்லக்கேட்க்கையில்
தெரிகிறது அழியப்படாத
தீண்டாமை வன்மம்!

கத்தியின்றி ரத்தமின்றி
பேசாத வார்த்தைகளும்,
பேசிய மௌனமும்
ஒருவரை சிதைக்குமெனில்
குவளைக்குள் பதுங்கிக்கிடக்கும்
மனித மரங்கள்
அன்பை தொலைத்த இடம் எங்கே?


கருவறையிலேயே கல்லறை
கட்டுகிறார்கள்,இரக்கமின்றி
நிறுத்தப்பட்ட துடிப்புகளோடு
சிசுக்கொலைகளாய்!


பிஞ்சுகளை தனித்து விட
சுமை, ஊனம் என்று
ஏதேதோ காரணம்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்!


உயிரை யாசகமிட்டவர்கள்
தனித்து விடப்பட்டு,
தஞ்சம் புகுத்தப்படுகிறார்கள்
முதியோர் இல்லங்களில்!


கட்டுமரம் என்று காகிதக்கப்பலில்
கரையேர நினைப்பது
நிதர்சனம் அன்றோ?
என்று நினைத்த நொடியில்
தோற்று நிற்கிறேன் நான்
நிழலுலகில் நிஜத்தை தேடும்
சராசரிப்பெண்ணாய்!

35 comments:

 1. உண்மை
  நல்ல கவிதை தோழி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருக்கைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Sir!

   Delete
 2. மிக அருமை யுவராணி அக்கா....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருக்கைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க!

   Delete
 3. unmai sako!

  nalla vari!

  kanneere minjum-
  vari!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருக்கைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!

   Delete
 4. முதியோர் இல்லங்கள், பெண் குழந்தைகளை வெறுப்பது இன்னும் மாறவில்லைதான். உங்கள் கவிதையில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ஒரு பக்கம் இப்படியென்றால் மறுபக்கம் சட்டங்களை வைத்து ஆண்களை மிரட்டும் அவலமும் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக அண்ணா! பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வகுக்கப்பட்ட சட்டதிட்டத்தினையும் அனுதாபங்களையும் கொண்டு ஆண்களை வதைக்கும் பெண்களும் சிலர் இருக்கிறார்கள்! நிழலுக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு அறிவது எளிதல்லவே அண்ணா

   Delete
 5. பேசாத வார்த்தைகளும்,|பேசிய மௌனமும் |ஒருவரை சிதைக்குமெனில் -அருமையான சொல்லாடல். மனித மரங்கள் அன்பைத் தொலைத்த இடமெதுவென்று புரியாமல் தான் நானும் விழிக்கிறேன். மாறியவர்களின் சதவீதம் இங்கே குறைவு. மாற்ற வேண்டியது இன்னும் நிறைய. அதற்கு இன்னும் நிறைய கவிதை மெழுகுவர்த்திகள் வேண்டும். எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா Sir! பாலில் கலக்குகிற ஒரு துளி விஷம் ஏற்படுத்தும் மாற்றம் ஒரு துளி தேன் கலப்பதில் இருப்பதில்லை! மாறாதது மாற்றம் ஒன்றே நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்ப்போம்! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Sir!

   Delete
 6. பெண்களுக்காய் குரல் கொடுத்த கவிதை அருமைங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க!

   Delete
 7. முன்னேற்றம் ஒரு பக்கம்! பின் நோக்கம் மறு பக்கம்!

  இதுதான் இன்றைய உலகம்!
  கவிதையும் சிந்தனையும் நன்று!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Sir!

   Delete
 8. நல்லா இருக்குடா யுவா ...

  நானும் யோசிக்கிறேன் ...எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ...எல்லாமே உண்மையான வரிகள் ...

  ReplyDelete
 9. 'கட்டுமரம் என்று காகிதக்கப்பலில்
  கரையேர நினைப்பது
  நிதர்சனம் அன்றோ?
  என்று நினைத்த நொடியில்
  தோற்று நிற்கிறேன் நான்
  நிழலுலகில் நிஜத்தை தேடும்
  சராசரிப்பெண்ணாய்!'

  மிகவும் ரசித்தேன் .. அருமை..!!

  ReplyDelete
 10. aka till this type of customs are followed in our Tamilnadu... These ppl never correct themselves unless they are getting affected.. I m damn sure

  ReplyDelete
 11. கோவையை சுற்றி இருக்கும் பதிவர்கள் சார்பாக கோவையில் உள்ள பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் அதானல் கோவையில் பதிவர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் குறித்து சந்திக்கலாம்.

  கோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

  கோவை, அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

  விரைவில் சந்திப்போம்...

  ReplyDelete
 12. தங்கையே உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் ...விருதை வாங்கிக் கொண்டால் ரொம்ப சந்தோசம் கொள்வேன் ...

  ReplyDelete
  Replies
  1. அக்கா தங்களது விருதுக்கு மிக்க நன்றி!!!

   Delete
 13. எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்


  மீண்டு(ம்) வந்தேன்

  ReplyDelete
  Replies
  1. அண்ணா தங்களது விருதுக்கு மிக்க நன்றி!!!

   Delete
 14. நிழலுலகில் நிஜத்தை தேடும்
  சராசரிப்பெண்ணாய்! //

  தங்களைக் குறித்த தங்கள்அறிமுகத்தையே
  அழகிய கவியாக்கி இருப்பதை மிகவும் ரசித்தேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்ச்சாகமூட்டும் கருத்துரைகளுக்கும் என்றும் எனது நன்றிகள் Sir!

   Delete
 15. நினைத்த நொடியில்
  தோற்று நிற்கிறேன் நான்
  நிழலுலகில் நிஜத்தை தேடும்
  சராசரிப்பெண்ணாய்!


  மிகவும் அருமையான வரிகளுடன் அற்புதமான கவிதை. சராசரியாக எழுதயுள்ளீர்கள் பாராட்டுகள்........

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   Delete
 16. உள்ளத்து நியாயங்கள்
  உணர்ச்சிப் பிழம்பாய்!
  வந்து வீழ்ந்தன வரிகள்!
  உங்கள் கவிதைக்கு
  இல்லை எல்லை!

  ReplyDelete
 17. இந்த பதிவை -
  வலைச்சரதில்பகிர்ந்துள்ளே!

  வருகை தாருங்கள்!
  http://blogintamil.blogspot.sg/

  ReplyDelete
 18. //கத்தியின்றி ரத்தமின்றி
  பேசாத வார்த்தைகளும்,
  பேசிய மௌனமும்
  ஒருவரை சிதைக்குமெனில்
  குவளைக்குள் பதுங்கிக்கிடக்கும்
  மனித மரங்கள்
  அன்பை தொலைத்த இடம் எங்கே?//

  பொங்கி வந்துள்ள அருமையான வரிகள்.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. வணக்கம்
  யுவராணி தமிழரசன்

  நல்ல படைப்பு மிகவும் அருமையான கவிதை அழகான சொற்கோர்வைகள் தொடருங்கள் பயணத்தை வாழ்த்துக்கள்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 20. ''..நிழலுலகில் நிஜத்தை தேடும்
  சராசரிப்பெண்ணாய்!...
  mmm....கருத்தாழமான் கவிதை.
  மிக்க நன்று.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 21. அன்புடையீர்,
  வணக்கம்.
  தங்களின் வலைப்பதிவுகளில் சில,
  இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
  அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete