Thursday, June 21, 2012

ஏக்கத்தோடு விநாடிகளும்!


ஏக்கத்தோடு விநாடிகளும்
நொடிந்து போகின்றன
அவர்களிடம் செலவிட
நேரமின்றி!

காத்திருத்தலும் காக்கவைப்பதும்
சுகம் தான் என்றாலும்
ஆயுளில் பாதி இப்படி
போராட்டத்தில்
தொலைவதேன்!

அன்னையின் மடியறையில்
அன்பைத்தேடும் வயதில்
புத்தகமூட்டைக்கு
பலியாகிறார்கள்!
மூன்று வயதில்
ஆனா ஆவன்னா
சொல்லத்தெரியவில்லை
என்று மழலையோடு
மன்றாடுகிறார்கள்
வளர்ந்த அரும்புகள்!

நெரிசல் நெருங்கிக்கொண்டிருக்கும்
நவீன பூமியில் ஒன்றோடு ஒன்று
முட்டி மோதி முளைக்கக்
கற்றுக்கொடுக்கிறார்களே
தவிர திமிரிய நெஞ்சத்தோடும்,
தளராத எண்ணத்தோடும்,
தடுமாறாத உள்ளத்தோடும்,
இழப்பிலிருந்து மீளவும்
பிறரை மீட்கவும்
கற்றுக்கொடுக்க தயங்குகிறார்கள்!

விதையிட்டதை விழித்தெழுப்பி
துளிர்த்துவிடச்செய்ய
தளராமல் தாங்கி
கடந்து போகிறார்கள்
விதி கொடுத்தவர்கள்!

வெயிலோடு கேள்விகேட்டு
வியர்வைத்துளியோடு
விடை அறிந்தவர்கள்
இன்று இயந்திரத்தோடு
முட்டி மோதுகிறார்கள்
பொழுதுபோக்காய்!

அறிவைத்தேடி அறிஞர்களையும்
அனுபவத்தையும் நாடியவர்கள்
நான்கு சுவற்றிற்குள்
கணினியை கடைகிறார்கள் இன்று!

இப்படி நவீனத்தோடு
காலம் கடத்தி மனிதம்
தொலைத்து தவிக்கும்
மலரும் மொட்டுக்களின்
தொலைந்த நாட்களை
மீட்க ஏக்கத்தோடு
விரதம் கிடக்கின்றன
இந்த விநாடிகளும்!

33 comments:

 1. உண்மை
  ரெம்ப அழகா சொன்னீங்க சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!

   Delete
 2. அறிவைத்தேடி அறிஞர்களையும்
  அனுபவத்தையும் நாடியவர்கள்
  நான்கு சுவற்றிற்குள்
  கணினியை கடைகிறார்கள் இன்று!//

  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Sir!

   Delete
 3. unmai !

  ethaarththamaaka sonneenga...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!

   Delete
 4. எல்லாம் பொறாமையில்தான்... மனிதன் அவனுக்காக வாழவில்லை. அடுத்தவர்களுக்காக இவன் வாழ்கிறான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!

   Delete
 5. இயந்திர கதியில் இயங்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியும் காத்திருப்பின் முடிவில், தன்னைத் தானே ஏக்கத்துடன் கழிக்க, திரும்பிப்பார்க்கவும் இயலாதவனாய் ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன், வழியில் தவறிய மனிதத்தையும் மனிதநேயத்தையும் பற்றிய பிரக்கினையுமில்லாமல். மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் யுவராணி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அக்கா!

   Delete
 6. மலரும் மொட்டுக்களின் தொலைந்த நாட்களை நினைந்து, நினைந்து உருகும் கவிதை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Sir!

   Delete
 7. நெரிசல் நெருங்கிக்கொண்டிருக்கும்
  நவீன பூமியில் ஒன்றோடு ஒன்று
  முட்டி மோதி முளைக்கக்
  கற்றுக்கொடுக்கிறார்களே
  தவிர திமிரிய நெஞ்சத்தோடும்,
  தளராத எண்ணத்தோடும்,
  தடுமாறாத உள்ளத்தோடும்,
  இழப்பிலிருந்து மீளவும்
  பிறரை மீட்கவும்
  கற்றுக்கொடுக்க தயங்குகிறார்கள்ஃஃஃஃஃ

  உண்மை தான் சந்திப்போம் சொந்தமே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   Delete
 8. //காத்திருத்தலும் காக்கவைப்பதும்
  சுகம் தான் என்றாலும்

  வெயிலோடு கேள்விகேட்டு
  வியர்வைத்துளியோடு
  விடை அறிந்தவர்கள்//

  //மூன்று வயதில்
  ஆனா ஆவன்னா
  சொல்லத்தெரியவில்லை
  என்று மழலையோடு
  மன்றாடுகிறார்கள்//

  அழகான படைப்பு சகோதரி... ஓடி விளையாட வேண்டிய வயதில் கூடுக்குள் அடைக்கப் படும் சிறார்களைப் பார்க்கும் பொழுது என் மனது சொல்கிறது, சீனு உன் யுகத்தில் நீ தப்பித்துக் கொண்டாய் என்று... மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நானும் பல முறை நினைத்ததுண்டு அண்ணா சில வருடங்கள் முன்பு பிறந்ததை நினைத்து! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!

   Delete
 9. அருமையான கவிதை. சிறுவர் விளையாட்டுக்கள் இனறு குறைந்து அவர்களும் கணினிக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் துயரத்தை என்னென்பது... தொலைத்த நாட்களை மீட்க ஏக்கத்தோடு தவம் கிடக்கும் விநாடிகள்... சூப்பர்ப். வாழ்த்துக்கள்மா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Sir!

   Delete
 10. நீங்கள் சொல்வது போல இக்காலச் சிறார்கள் இழந்தவை ஏராளம்.
  மதிப்பெண்ணை மட்டும் வைத்து குழந்தையின் அறிவை மதிப்பிடும் இக்காலத்தில், ஓடியாட வேண்டிய மாலைப் பொழுதில் விளையாட்டுக்கு முழுக்குப் போட்டு விட்டுப் நாள் முழுக்கப் பள்ளியில் படித்தது போதாதென்று பொதி மூட்டைகளைச் சுமந்து டியூஷன் சென்று மதிப்பெண் வாங்கப் போராடுகிறார்கள்.

  கணிணியில் முகம் புதைத்து மனிதம் தொலைக்கும் மழலைகளின் நிலை பற்றிய கவிதை அருமை! பாராட்டுக்கள் யுவராணி!

  ReplyDelete
  Replies
  1. மதிப்பெண் மதிப்பெண் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! வாழ்வின் எதார்த்தங்களை ஏற்க துணிவதில்லை தளர்ந்து போய் விடுகிறார்கள்! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அக்கா!

   Delete
 11. ////இன்று இயந்திரத்தோடு
  முட்டி மோதுகிறார்கள்
  பொழுதுபோக்காய்!////

  மனித ஓட்டங்களை அருமையாக வரிகளுக்குள் அடக்கியுள்ளீர்கள் நன்றி...

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!

   Delete
 12. காத்திருத்தலும் காக்கவைப்பதும்
  சுகம் தான் என்றாலும்
  ஆயுலில் பாதி இப்படி
  போராட்டத்தில்
  தொலைவதேன்!

  என் மனதில் ஓடும் எண்ணங்களை எழுத்தாக்கிய விதம் அருமை சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அக்கா!

   Delete
 13. //அன்னையின் மடியறையில்
  அன்பைத்தேடும் வயதில்
  புத்தகமூட்டைக்கு
  பலியாகிறார்கள்!//

  அழகான வரிகள். அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Sir!

   Delete
 14. இக்காலத்திய கல்வி முறையின் குறைபாடுகளையும், குழந்தை வளர்ப்பு எனும் அரியதொரு வாழியல்கலை, கொஞ்சம் கொஞ்சமாக நம் தனித்தமிழ் நாட்டில் அழிந்து வருவதையும் பதிவு செய்த விதம் அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா!

   Delete
 15. கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் மேலும் (ஆயுல் - ஆயுள்) ஆக மாற்றுங்க..

  ReplyDelete
 16. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!! பிழையினை திருத்தி விட்டேன்!! பிழையினை சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

  ReplyDelete
 17. இப்படி நவீனத்தோடு
  காலம் கடத்தி மனிதம்
  தொலைத்து தவிக்கும்
  மலரும் மொட்டுக்களின்
  தொலைந்த நாட்களை
  மீட்க ஏக்கத்தோடு
  விரதம் கிடக்கின்றன
  இந்த விநாடிகளும்!//

  அருமையான கருத்து
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. எனக்கு அளிக்கப்பட்ட ஓர் விருதினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
  அன்புடன்
  vgk

  ReplyDelete