Sunday, August 12, 2012

மீண்டும் ஒரு முறை!


                   எல்லாருக்கும் வணக்கம்! மீண்டும் எனக்கு கிடைத்த விருதினை பதிவு செய்ய இங்கு வந்திருக்கிறேன்! என்னோடு சேர்த்து 108 பதிவர்களோடு இவ்விருதினை பகிர்ந்து கொண்ட வை.கோபாலகிருஷணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருதினை பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் இவ்விருதினை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அவரது குறிப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 


                   விருதினை பெற்றவர்கள் அவர்களை பற்றி கூற வேண்டுமாம்! முன்பு இருமுறை விருதினை வாங்கிய போதும் நினைத்தேன் வாரம் ஒரு பதிவேனும் பதிந்து விட வேண்டும் என்று. காலம் போதவில்லை என்று எனது பிழையை இடம் மாற்ற விரும்பவில்லை. நான் தேர்ந்தெடுத்த துறையில் வேலை வாங்கிவிட்டதாக ஒருமுறை வாங்கிய விருதினை பதிக்கும் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மனித எண்ணத்திற்கும் காலனின் கிறுக்கல்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் என்ற எனது வரியினையே இங்கு நினைவு கூர்ந்து எட்டாத கனியாய் நினைத்த நான் விரும்பும் துறையில் வேலைவாய்ப்பு அமைந்திருக்கிறது. அதற்கான நேர்முகத்தேர்விற்கு தயாராகிக்கொண்டிருப்பதால் என்னால் சரியாக பதிவிட முடிவதில்லை. 
            மேலும் எனக்கு பிடித்த பத்து விஷயங்கள் இதோ!!
 1. மழலையோடு விளையாடுவது--நான்கே வயதான என் அக்கா மகனோடு சண்டை இடுவது
 2. மழையோடு விளையாடுவது-- மழையோடு விளையாடுவது எப்போதும் பிடிக்கும் ஆனால் மழையிலிருந்து தப்பிக்க எப்பொழுதும் என்னிடம் காரணம் இருக்கும் கையிலிருக்கும் புத்தகம், உடல் நிலை என்று. என்றாவது ஒரு முறையாவது மழையோடு மழையாகவேண்டும்.
 3. புத்தகம் படிப்பது--சில மாதங்களுக்கு முன்பே என் தோழியின் ஊக்குவிப்பால் புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுதுதான் மூன்று ஆங்கில நாவல்கள் முடிந்து நான்காவது படித்துக்கொண்டிருக்கிறேன்.
 4. லிட்டில் சிஸ்டர்ஸ் ஹோமும் என் தோழரும்--இளங்கலை பட்டம் பயிலுகையில் என் மாலை நேரத்து நடைபயணத்தில் சந்தித்த தோழர் இன்று முதியோர் இல்லத்தில் இருக்கிறார். அவரை பார்க்கச்செல்வது மிக பிடிக்கும்
 5. வாரமுதல் நாள்--என் அம்மாவுடன் செலவிட நான் ஏங்கும் ஞாயிற்றுக்கிழமைகள்!
 6. சைக்கிலில் பயணம் செய்வது--தினம் எனது கல்லூரிப்பயணம் தனிமையில் சைக்கிலில் நினைக்கையில் இனிக்கிறது. நாளை விடியலுக்கு ஏங்குகிறேன் என்னவனோடு(சைக்கில்) என் பயணம் தொடர
 7. தனிமை--தனிமையின் மௌனத்தில் என் இதயத்துடிப்பின் ஓசையை கேட்பது மிகவும் பிடிக்கும். இதை விட சந்தோஷமாய் வேறு எதுவும் அனுபவிப்பதற்கில்லை என தோன்றும் தருணங்கள்!
 8. கை வேலைகள்--சும்மா இருப்பதை விட சும்மா இருப்பதை ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருப்பேன். 
 9. பதிவு எழுதுவது--நான் ரசிக்கும் என் வலைப்பூவும் எனது பதிவுகளும்.
 10. அரட்டை--புது மனிதர்களையும் அவர்களது அனுபவங்களையும் பயில்வது.இப்போதைக்கு என் பாட்டியுடன் அரட்டை அடித்து அவர்களது அனுபவங்களை திரட்டிக்கொண்டிருக்கிறேன்

       இவை ஏற்கனவே எனது பதிவினில் குறிப்பிட்டவையே! மேலும் நான் இவ்விருதினை இருவரோடு பகிர்ந்து கொள்கிறேன்!


 என் பூவுலக உறவுகளுக்கும்
 என் பதிவுலக உறவுகளுக்கும்
 நான் இழந்துவிட்டு தவிக்கும்
 என் எழுத்துலக முதற்புள்ளிக்கும்
 எனது நன்றிகள் பல!!!!
43 comments:

 1. அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டு, அழகாக தங்களுக்குப் பிடித்தமான பத்து விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் சார்!

   Delete
 2. //சைக்கிலில் பயணம் செய்வது--தினம் எனது கல்லூரிப்பயணம் தனிமையில் சைக்கிலில் நினைக்கையில் இனிக்கிறது.

  நாளை விடியலுக்கு ஏங்குகிறேன் என்னவனோடு (சைக்கிள்) என் பயணம் தொடர//

  தங்களின் ஆசைகள் நிறைவேற அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் Sir!

   Delete
 3. தங்களிடமிருந்து இந்த விருதினைப்பெறும் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  //திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் இவ்விருதினை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அவரது குறிப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். //

  என் நன்றிகளையும் திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  vgk

  ReplyDelete
 4. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

  தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 5. விருதினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. பகிர்ந்துகொண்ட விருதினை ஏற்று கருத்திட்டமைக்கு நன்றிகள் சார்!

   Delete
 6. திரு VGK ( வை. கோபால கிருஷ்ணன் ) அவர்களிடமிருந்து “SUNSHINE BLOGGER AWARD “ வாங்கிய உங்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்! விரும்பிய துறையில் வேலை
  கிடைத்திடவும் வாழ்த்துக்கள்!
  என்னைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்!
   விருதினை பற்றிய தங்களது குறிப்புகளுக்கும் நன்றி சார்!

   Delete
 7. //என்னோடு சேர்த்து 108 பதிவர்களோடு இவ்விருதினை பகிர்ந்து கொண்ட வை.கோபாலகிருஷணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.//

  விருது பெற்றதற்கு வாழ்த்துகள். விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்! தங்களது ஒரு பின்னூட்டம் ஸ்பாம் ல் சேர்ந்திருந்ததால் தாமதமாகதான் கவனித்தேன் சார்! மன்னிக்கவும்!

   Delete
 8. நேர்முகத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள். பாட்டியுடன் அரட்டை எப்படி இருக்கிறது. பெரியவர்களிடம் பேசுவதே ஒரு சுவராஷ்யம்தான். விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா! அரட்டை படு ஸ்வாரஸ்யம் அண்ணா!

   Delete
 9. மழை மழலையும் பிடிக்காதவர்கள் உண்டோ வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா!

   Delete
 10. யுவராணி... இந்த விருது கலை அக்காவால் எனக்கு முன்பே கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களால் இப்போது கொடுக்கப்படுவதை மீண்டும் ரொம்ப சந்தோஷத்தோட பெற்றுக் கொள்கிறேன். என்மீது அன்பு கொண்டு பகிர்ந்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என் அடுத்த பதிவில இதைக் குறிப்பிட்டு எழுதிடறேன். சரியா?

  ReplyDelete
  Replies
  1. பகிர்ந்துகொண்ட விருதினை ஏற்று கருத்திட்டமைக்கு நன்றி அக்கா!

   Delete
 11. வாழ்த்துக்கள் யுவா..
  // மனித எண்ணத்திற்கும் காலனின் கிறுக்கல்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் என்ற எனது வரியினையே இங்கு நினைவு கூர்ந்து எட்டாத கனியாய் நினைத்த நான் விரும்பும் துறையில் வேலைவாய்ப்பு அமைந்திருக்கிறது ..
  மிகவும் ரசித்தேன்..இனி எல்லாம் ஜெயமே..!!

  ReplyDelete
 12. 108 பதிவர்களோடுவிருதினை பகிர்ந்து கொண்ட வை.கோபாலகிருஷணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா!

   Delete
 13. விருது பெற்றமைக்கும் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள் சகோ யுவா...

  // நாளை விடியலுக்கு ஏங்குகிறேன் என்னவனோடு(சைக்கில்) என் பயணம் தொடர// அழகிய கவிதை ததும்பும் உணர்வு படித்ததும் மெய்சிலிர்த்தது ......

  ReplyDelete
  Replies
  1. வரிகளை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா!

   Delete
 14. விருது வாங்கிடீங்க...டிரீட் எப்போ தருவீங்க..

  ReplyDelete
  Replies
  1. டிரீட் தானே அண்ணா! அடுத்த பதிவில் தந்துவிடுகிறேன்!

   Delete
 15. எழில்மிகு விருதுக்கும் அதை ஏற்றவர்களுக்குப் பகிர்ந்தமைக்கும், உங்களுக்குப் பிடித்தமானவற்றின் பகிர்வுக்கும் பாராட்டுகள் யுவராணி. உங்கள் வளமான எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. எழில்மிகு விருதுக்கும் அதை ஏற்றவர்களுக்குப் பகிர்ந்தமைக்கும், உங்களுக்குப் பிடித்தமானவற்றின் பகிர்வுக்கும் பாராட்டுகள் யுவராணி. உங்கள் வளமான எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா!

   Delete
 17. வாழ்த்துக்கள் சகோ...!

  முத்தான பத்து விசயங்கள்... பாராட்டுக்கள்...

  தொடருங்கள்... நன்றி...  என் தளத்தில் : அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்கு நன்றி அண்ணா! தங்களது "அப்படிச் சொல்லுங்க" அப்படி போடுங்க என்பது போல் இருந்தது அண்ணா! குறள்களின் வித்தியாசமான விளக்கம் அருமை அண்ணா!

   Delete
 18. http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

  தயவுசெய்து தங்களுக்கான மேலும் ஓர் விருதினை ஏற்றுக்கொள்ள்வும். அன்புடன் vgk

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ஒருமுறை தங்களிடமிருந்து விருதினை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி சார்!

   Delete
 19. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 20. வணக்கம் சொந்தமே!மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.பிடித்தவைகள் எனக்கும் பிடிக்கின்றன்.அருமையான தொகுப்பு.வாழ்த்தக்கள் சொந்தமே!சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்!

   Delete
 21. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
  Replies
  1. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் பகிர்ந்து கொண்ட விருதினை இங்கே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி மேடம்!

   Delete
 22. Respected Madam,

  I am very Happy to share an award with you in the following Link:

  http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

  This is just for your information, please.

  If time permits you may please visit and offer your comments.

  Yours,
  VGK

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ஒருமுறை தங்களிடமிருந்து விருதினை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி சார்!

   Delete
 23. மிக்க நன்றி அக்கா.....

  ReplyDelete