Monday, October 8, 2012

மீண்டும் வாங்கிய விருதிற்காக-2

                        மீண்டும் அனைவரையும் எனது வலைப்பூவிற்கு வரவேற்கிறேன்! மீண்டும் மூன்றாவது முறையாக திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் வாங்கிய விருதிற்காக இந்த பதிவை பகிர்கிறேன் இங்கு. பதிவுலகில் எனது பயணம் ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்துவிட்டது. மிக சந்தோஷமான பயணமாகவே இருக்கிறது. தோழியின் உந்துதலில் ஆரம்பித்தது இன்று என்னோடு நானாய்! எனது பயணத்தின் மைல்கற்களாய் நான் அடைந்த ஐந்தாவது விருது இது. ஒவ்வொரு முறையும் விருதினை பெறுகையில் இனி எழுதும் பதிவுகளில் இன்னும் கவனம் செலுத்தி, திருத்தி, செதுக்க விரும்புவேன்.

           
              பதிவுலக பயணத்தின் போது ஒரு அங்கீகாரமும், அறிமுகமும் அவசியமாகத்தோன்றும். அதிகமான ஃபாலோயர்கள், அதிகமான பின்னூட்டங்கள் என எதிர்பார்த்திருப்போம். ஆனால் எதுவும் எளிதில் கிடைத்துவிடாது. எதையும் எதிர்ப்பார்க்காது பதிவுகளில் கவனம் செலுத்துதல் எனது பதிவுலகப்பயணத்தில் நான் கற்ற முதல் பாடம். 
             இதைப்பற்றி திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் "புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள்!"  என்ற தலைப்பில் ஒரு பதிவினை பதிந்திருக்கிறார். அதை இங்கு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் என்னைப்போன்ற புது பதிவர்கள் பலர் ஒரு அறிமுகம் இல்லாத காரணத்தினால் பதிவுகளை எழுதுவதை தவிர்த்துவிடுகிறார்கள். மிக சிறப்பாக எழுதுபவர்கள் கூட வலைப்பூவை விட்டுச் செல்வது தான் வருத்தமாக இருக்கிறது. பதிவுலகம் பற்றி எதுவுமே தெரியாமல் தான் உள்ளே வந்தேன். இன்று ஓரளவுக்கு அறியமுடிவதில் மிக சந்தோஷமாக இருக்கிறது.    
          எத்தகைய தளம் இது நம்மை நாம் அறிவதில் வார்த்தைகளின்றி நெகிழ்ந்து போகிறேன். பதிவர்கள் யார்? என்பது பற்றி "பதிவர்கள்- ஒரு சிறு அறிமுகம்" என்ற தலைப்பில் திரு. ரமணி ஐயா அவர்கள் பகிர்ந்துள்ள ஒரு பதிவு என்னை மிக கவர்ந்தது. எனது ஐந்தாவது விருது "Fabulous Blog Ribbon Award" -ஐ நான்கு பதிவர்களோடு பகிர விரும்புகிறேன்.


பதிவுக்கு பதிவு வித்தியாசம் காட்டி காணாமல் போன கனவுகளை தேடிப் பிடித்து அழகிய சிதறல்களாய் சிலிர்த்துவிட்டுப்போகும்
 ராஜி அவர்கள்
வாழ்வின் எதார்த்தங்களை அழகிய நடையில் 
கவிதைகளாகத் பதியும்
சசிக்கலா அவர்கள்
வார்த்தைகளில் சாட்டை பொதித்து மனிதத்தை 
பதம் பார்க்கும் கவிதைகள் எழுதும
சீனி அவர்கள்
தார்த்தமான வாழ்க்கை தருங்களை எளிய நடையில், எதார்த்தமான வார்த்தை பிரயோகங்களோடு கவிதை எழுதும்
கீதமஞ்சரி அவர்கள்
http://geethamanjari.blogspot.in/


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மீண்டும் சந்திப்போம் விரைவில்!!!!


23 comments:

 1. விருதினை அன்புடன் ஏற்று சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  தாங்கள் இந்த விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ள நான்கு பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

  மேலும் மேலும் பல்வேறு விருதுகள் பெற்று எழுத்துலகில் ஜொலிக்க என் நல்வாழ்த்துகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 2. யுவராணி சகோதரியே!

  உங்கள் பாசத்திற்கு -
  பகிர்வுக்கும் மிக்க நன்றி!

  உங்களது விருதினை-
  மனமார ஏற்று கொள்கிறேன்!

  நீங்கள் தான் எனக்கு முதல் -
  விருதுதந்து அங்கீகாரம்-
  கொடுத்த முதல் பதிவாளர்!
  உங்களுக்கும் ஐந்தாவது-
  விருது இது அய்யா வை. கோபால கிருஷ்ணன் அவர்கள் கொடுத்த போது எனக்கும்-
  தந்தார்கள்!

  உங்களுடைய விருதினையும்-
  ஏற்று கொள்கிறேன்!

  ReplyDelete
 3. எதையும் எதிர்ப்பார்க்காது பதிவுகளில் கவனம் செலுத்துதல் எனது பதிவுலகப்பயணத்தில் நான் கற்ற முதல் பாடம். அன்புத் தோழியே தங்களைப் போலவே நானும் கருத்தில் ஒன்றியிருகிறோம்.

  மிக்க நன்றி சகோதரி.

  ReplyDelete
 4. மீண்டும் ஒருமுறை எனது பதிவினை நினைவுகூர்ந்த சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. பல்வேறு விருதுகள் பெற்று எழுத்துலகில் ஜொலிக்க நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் யுவா.. விருது பெற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. தோழி உங்களின் வலைக்கு இன்று தான் முதன் முதலில் வருகிறேன்.

  எதற்குமே ஒரு துவக்கம் வேண்டும்...!!

  பதிவிற்கும்
  பயணத்திற்கும்
  பெற்ற பரிசுக்கும் சேர்த்து
  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 8. @வை.கோபாலகிருஷ்ணன்
  தங்களது விருதிற்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் சார்!

  ReplyDelete
 9. @Seeni
  விருதினை ஏற்றமைக்கு எனது நன்றிகள் அண்ணா!

  ReplyDelete
 10. @sasi kala
  நமது கருத்துகள் ஒத்துப்போவதில் மிக்க மகிழ்ச்சி! எனது விருதினை ஏற்றமைக்கு நன்றி அக்கா!!

  ReplyDelete
 11. @தி.தமிழ் இளங்கோ
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் சார்! பகிரப்படவேண்டிய பதிவே சார் தங்களுடையது!

  ReplyDelete
 12. @மாலதி
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் அக்கா

  ReplyDelete
 13. @திண்டுக்கல் தனபாலன்
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் அண்ணா!

  ReplyDelete
 14. @அருணா செல்வம்
  தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் அக்கா!

  ReplyDelete
 15. மீண்டும் என்னை அங்கீகரித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறீர்கள். மிக மிக நன்றி யுவராணி. நான் சில பணிகள் காரணமாக வலையுலகுக்கு விடுப்பு விட நினைத்திருக்கும் நேரத்தில் நல்லதொரு அறிவிப்பு. நன்றியும் வாழ்த்துக்களும் தோழி.

  ReplyDelete
 16. விருது பெற்றமைக்கு முதலில் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் யுவராணி. அதை என் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் பகிர்ந்ததில் சந்தோஷம் இரட்டிப்பாகிறது. மிக்க நன்றி.

  ReplyDelete
 17. அனுபுத்தங்கையே! நீங்க விருது தந்ததை ஏற்கனவே பார்த்துட்டேன். ஆனா, கருத்துரைக்க நேரம் இல்லைம்மா. வீடு கட்டுற பிசில இருக்கவே அதிகம் கருத்துரைக்க நேரமில்லை. விருது வழங்கியமைக்கு நன்றி. காலந்தாழ்த்தி நன்றி சொல்லுவதற்கு மன்னிக்க சகோதரி.

  ReplyDelete
 18. @கீதமஞ்சரி
  தங்களது வருகைக்கும் விருதினை ஏற்று என்னை மகிழ்வித்தமைக்கும் எனது நன்றிகள் அக்கா!

  ReplyDelete
 19. @பால கணேஷ்
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் சார்!

  ReplyDelete
 20. @ராஜி
  பரவாயில்லை அக்கா! தங்களது வலைப்பூ ஒப்பன் ஆகாததால் நானே தங்களுக்கு தாமதமாக தான் எனது விருதினை பற்றி தெரிவித்தேன் அதுவும் கடைசி கருத்துரையாக தெரிவித்திருந்தமையால் தாங்கள் பார்த்தீர்களா என்று எனக்கு தெரியவில்லை அக்கா! அதனால் தான் மீண்டும் கருத்துரையிட்டேன்!

  எனது விருதினை ஏற்றமைக்கு எனது நன்றிகள் அக்கா!

  ReplyDelete