Thursday, November 8, 2012

என் விழிகளுக்கு அப்பால்!!!


 மஞ்சள் நகரின்
 மாலை மயக்கத்திலே
 மயங்கித்தான் போனேன்
 நானும் கொஞ்சம்!

விளையாட்டு பூங்காவில்
 பூத்துக்குழுங்கிய
 மலர்களுக்கு மத்தியில்
 விசித்திரமாய் வியந்து நின்ற
 என் பயணத்தின் ஆரம்பம்!

 பரிசுகளும், தள்ளுபடிகளும்
 நிறைந்திருப்பதாய் காட்டிய
 விளம்பரத்தாள்கள் அடைத்துக்கிடந்த
 பேருந்து நிறுத்தம்!

 வங்கிகளும் ஏடீஎம்களும்
 நிறைந்திருந்த சாலையில்
 "திருடர்கள் ஜாக்கிறதை"
 என கம்பீரமாக நின்று
 அச்சுருத்தும் காவல்துறையின்
 எச்சரிக்கை பலகை!

 தீபாவளி நெருங்குவதை
 மக்கள் கூட்டத்தின் நெரிசலுக்கு
 மத்தியில் கத்தி கூச்சலிட்டுக்கொண்டிருந்த
 பேருந்து நிலையமும்,
 மிகக்குறுகளான கடைவீதியும்!

 பாரம் தாங்காமல்
 இடம் கொடுக்க மறுத்த
 அதிவேக அரசுப்பேருந்து
 கைகாட்டியது சாதாரண கட்டண
 வீடியோ கோச் பேருந்து!

 "சாட்டை" அடியில்
 திமிரிக்கொண்டிருந்த
 தொலைக்காட்சிப்பெட்டியின்
 சத்தத்துக்கு மத்தியில்
 அலறிக்கொண்டிருந்த கைப்பேசி
 பக்கத்து இருக்கையில்!

 ஏதேதோ நினைவுகளுக்கு மத்தியில்
 கடக்கும் பாதையில்
 கடந்து போகின்றதிலிருந்து
 தப்பிப்பிழைக்காத எனது விழிகள்
 கண்டது முன்னிருக்கையில்
 தலைமுடி பிடித்து
 சண்டை போட்டுக்கொண்டிருந்த
 குழந்தையும், அம்மாவும்!

 குறுகிய வாய்க்காலின்
 மிகச்சிறிய துளைகளில்
 வழிந்த நீர்!
 நெடுஞ்சாலையில் அங்கங்கு
 நடந்து கொண்டிருந்த
 சில்லரை துணி வியாபாரங்கள்!

 ஆட்களின்றி வெறிச்சோடிக்கிடந்த
 புதிதாக கட்டப்பட்ட
 நூலகம்!

 பல இலட்சம் செலவில்
 கட்டப்பட்டதை பார் என
 கிசுகிசுத்து கிண்டலடித்துக்கொண்டிருந்த
 தலைவர் சிலைக்கு முன்
 சிதறிக்கிடந்த குப்பைகள்!

 குப்பைத்தொட்டியாய்
 மாறிப்போன பல
 சிற்றூர் பேருந்து நிருத்தங்கள்!
 தள்ளாடித்தள்ளாடி
 பேருந்தை நிறுத்த போராடிய
 "குடி" மகன், ஏறியவனை
 கரித்துக்கொட்டிய ஓட்டுநர்
 இறக்கிவிட்ட நடத்துநர்!

 அனைத்திற்கும் மத்தியில்
 முன்பக்க இருக்கையின்
 பின்பக்கத்தில் முட்டிங்கால்
 முட்டிக்கொள்ள
 அசௌகரியத்தை ஏற்படுத்திய
 எனது உயரம் இன்று
 கொஞ்சம் சௌரியமாய்
 பக்கத்து இருக்கையில்
 அமர்ந்திருந்த முதியவள்
 அனுசரித்துக்கொண்டதால்!

அனைத்தையும் கடந்து
 வீடு சேர்கையில்
 விழிகள் விழித்திருந்தும்
 இதயம் இருக மூடி
 த்லையனையை
 புரட்ட ஆரம்பித்தது
 நாளைய பரிட்சையை
 நினைத்து!

46 comments:

 1. காட்சி விவரிப்புக்கள் ரசிக்க வைத்தன! அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!

   Delete
 2. நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  முடிவு வரி மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

   Delete
 3. யுவராணி.. உன்னோடு சேர்ந்து நானும் பயணித்ததுபோல இருக்கு கவிதை.. அழகா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா!

   Delete
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்கு எனது நன்றிகள் சார்!

   Delete
 5. சமூக எதார்த்தத்தை அழகாகப் பிரதிபலிக்கும் கவிதை.

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

   Delete
 6. வலைச்சர ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

   Delete
 7. நேர்த்தியான யதார்த்த வாழ்வின் கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா!

   Delete
 8. உங்களுக்கு பதில் சொல்ல இங்கு இடம் போத வில்லை.
  இங்கே பதில் தருகிறேன்.
  வாருங்கள்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. பதிலைக்கண்டேன் மிகுந்த சந்தோஷம் சார்!

   Delete
 9. உங்களுக்கு பதில் சொல்ல இங்கு இடம் போத வில்லை.
  இங்கே பதில் தருகிறேன்.
  வாருங்கள்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 10. நாளைக்கு பரீட்ச்சைய வச்சிக்கிட்டு, இதுல்லாம் வேணுமா???

  தேவைதான் உங்களுக்கு...
  நம்ம இனம்...

  ReplyDelete
  Replies
  1. பரிட்சை புக் எடுத்தாலே நமக்கு தூக்கம் வந்துடுது! தூக்கம் கலைய மத்தத யோசிச்சா பரிட்சையே முடிஞ்சிடுது! மாணவர்கள் படும் பாடு இருக்கே!!!!! பாவம் அண்ணா! நீங்களும் அப்படி தானா! வாழ்த்துக்கள்!

   Delete

 11. வலைச்சர ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.
  எனது பதிவை குறிப்பெடுத்துக் காட்டிய யுவராணி தமிழரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா!

   Delete

 12. வலைச்சர ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.
  எனது பதிவை குறிப்பெடுத்துக் காட்டிய யுவராணி தமிழரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 13. நல்லதொரு கவிதை !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

   Delete
 14. நானும் சற்று மயங்கித்தான் போனேன், யார்யாரோ! என்னன்னவோ! சொல்கிறார்கள் புரியாமல் நானும் வாழ்த்துகிறேன்.
  வாழ்வில் எல்லா வளமும் , நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  சிரிக்காதிங்க யாரும், இது புரியாமல் வாழ்த்தியது, இப்போது இந்த வலைப்பதிவை பின்தொடர்கிறேன், இனி எல்லாம் புரியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கு மிகுந்த நன்றிகள்! நிச்சயம் வாருங்கள் என் பதிவினில் உள்ள நிறை மட்டும் அல்ல குறையும் சொல்லுங்கள்!!!

   Delete
 15. நீண்ட கவிதை வரிகள்... வார்த்தைகளில் ஜாலத்தால் மயங்க வைக்கிறது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள்

   Delete
 16. அலுவல்கள் கொஞ்சம் அதிகம் காரணமாக அன்றே என்னால் வர இயலவில்லை.. அறிமுகத்திற்கு மிக்க நன்றி யுவராணி. உங்கள் அணைத்து அறிமுகங்களையும் படித்தேன். அறிமுகங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரைகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த சந்தோஷம்!
   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள்!!

   Delete
 17. nice

  http://cherubcrafts.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள்!!

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள்!!

   Delete
 19. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

  ReplyDelete
 20. ம்ம்ம் ..அருமை

  என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி பெருமை செய்தமைக்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 21. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும் மிகுந்த சந்தோஷமும் நன்றிகளும் MADAM!

   Delete
 22. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  ReplyDelete
 23. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 24. அன்புள்ள யுவராணி.

  வணக்கம்.

  தாங்கள் சமீபத்தில் பறித்துள்ள வெற்றிக்கனியையைப்பற்றி என் கீழ்க்கண்ட பதிவுகளில் லேஸாக கோடிட்டுக்காட்டியுள்ளேன்.

  http://gopu1949.blogspot.in/2013/07/23.html

  http://gopu1949.blogspot.in/2013/07/24.html

  http://gopu1949.blogspot.in/2013/07/26.html

  http://gopu1949.blogspot.in/2013/07/27.html

  அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. சார் மிகுந்த சந்தோஷம் சார் என்னைப்பற்றியும் எனது வெற்றியை பற்றியும் உங்களது தளத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு!11 மீண்டும் நான் பதிவுலகிற்கு வந்துவிட்டேன்!!!

   Delete
 25. முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)
  http://tthamizhelango.blogspot.com/2013/08/blog-post_5.html

  தொடர்பதிவு என்றால் நானும் சில வலைப் பதிவர்களை அழைக்க வேண்டும். நான் எனக்கு அறிமுகமான வலைப் பதிவர்கள் ஆறு பேரை அன்புடன் அழைத்துள்ளேன்
  சுப்புத் தாத்தா ( http://subbuthatha72.blogspot.in )
  G M பாலசுப்ரமண்யம் (http://gmbat1649.blogspot.in )
  மனோ சுவாமிநாதன் (http://muthusidharal.blogspot.in )
  ஆரூர் மூனா செந்தில் ( http://www.amsenthil.com )
  கவியாழி. கண்ணதாசன் (http://kaviyazhi.blogspot.in )
  யுவராணி தமிழரசன் ( http://dewdropsofdreams.blogspot.in )

  ReplyDelete
  Replies
  1. ஐயா முதலில் மிகுந்த தாமதமான பதிலுக்கு எம்மை மன்னியுங்கள்! என்னையும் "முதல் பதிவின் சந்தோஷம்" தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மிகுந்த நன்றிகள்! இப்பொழுது தான் வேலையில் சேர்ந்துள்ளேன் உங்கள் துறையே தான்! வீட்டிற்கும் பணியிடத்திற்குமான அலைச்சலே எனது பாதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது! அதனால் பதிவினில் கவனம் செலுத்தமுடிவதில்லை! இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பொழுதுகளை திட்டமிடவேண்டும்!
   என்னை தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மீண்டும் ஒருமுறை மிகுந்த நன்றிகள்! மேலும் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும் மிகுந்த சந்தோஷமும் நன்றிகளும் சார்!

   Delete
 26. எனது “முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)” என்ற கட்டுரையில் http://tthamizhelango.blogspot.com/2013/08/blog-post_5.html
  தங்கள் கருத்துக்கு நான் தந்த மறுமொழி:

  மறுமொழி> யுவராணி தமிழரசன் said...
  // இப்பொழுது தான் வேலையில் சேர்ந்துள்ளேன் உங்கள் துறையே தான்! வீட்டிற்கும் பணியிடத்திற்குமான அலைச்சலே எனது பாதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது! அதனால் பதிவினில் கவனம் செலுத்தமுடிவதில்லை! இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பொழுதுகளை திட்டமிடவேண்டும்! //

  தங்களுக்கு வங்கியில் வேலை கிடைத்து இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சிஇந்த நல்ல செய்தியை திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமது பதிவொன்றில் முன்பே தெரிவித்து இருந்தார். ! வாழ்த்துக்கள்!

  வங்கிப் பணியில் கவனம் செலுத்தவும். வங்கி, வங்கிப் பணி தவிர்த்து மற்றவற்றை யோசித்து எழுதுங்கள்.

  ReplyDelete
 27. மிகுந்த சந்தோஷம் சார் தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்!!!
  நிச்சயம் தாங்கள் சொன்னதை கவனத்தில் கொள்கிறேன்!

  ReplyDelete