Saturday, February 9, 2019

நில் கவனி சொல்


சீறுகிற எண்ணங்களுக்கு மத்தியில் நிஜத்தை சில்லுசில்லாக்கி
அதில் வார்த்தைகளை தெரிந்தெடுக்கும்
முன் நின்று..
நினைவுகளுக்குள் வாதிடும்
அறிவுக்கும் மனசுக்கும்
மத்தியில் நிதர்சனத்தின் குறைவையும் நிறைவையும் நிதானமாய் கவனித்து..
தெரிந்தெடுத்த வார்த்தைகளில்
நீதி விளங்க
சுத்த வார்த்தைகளை
கோர்த்தெடுத்து சொல்...